To Get MNTS Membership Click here :Membership
Sangamam 2021 – Jan 24
MNTS Invites You All!
பொங்கல் விழாவினை முன்னிட்டு சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்குபெரும் ஆடல், பாடல், நாடகம் மற்றும் பல சிறப்பு நிகழ்ச்சிகளை இம்முறை இணையத்தில் குடும்பத்தோடும் நண்பர்களோடும் இனிதாய் கண்டுகளிக்க அனைவரும் தயாராகுங்கள்!
சிறப்பு நிகழ்ச்சிகள்:
திரு. பெரிய மேளம் முனுசாமி குழுவினரின் “இசை முழக்கம்”
இயக்குனர் திரு. சங்ககிரி ராஜ்குமார் குழுவினரின் “குமண வள்ளல்” தெருக்கூத்து
“யாருப்பா மாறனும்?” – மினசோட்டாத் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் நடிக்கும் விழிப்புணர்வு நாடகம்
Variety of cultural performances & special programs are planned for Sangamam 2021, get ready to watch it online along with friends and family live on Jan 24th.
Live Link : https://youtu.be/cIUQ74Zcawk
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடப் போகும் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி, நமது பெருமை மிகு மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் தொடர் முயற்சியால், 2021 ஆம் ஆண்டு சனவரி மாதத்தை “தமிழ் மொழி மற்றும் மரபு மாதமாக” கொண்டாடும் வகையில் மினசோட்டா மாநில ஆளுநர் திரு.டிம் வால்ச் அரசு முத்திரையுடன், கையெழுத்திட்டு பிரகடனம் செய்துள்ளார். வட அமெரிக்காவில் ஒரு மொழிக்கும் அதன் மரபுக்கும் மினசோட்டா மாநில அரசால் முதல் முறையாக, ஒப்புமை பெற்று, அடையாளப்படுத்தப்பட்ட ஒரு மொழி என்றால் அது நமது தமிழ் மொழிக்கே ஆகும். கடந்த ஆண்டு (2020 சனவரி) முதல் முறையாக நாம் பிரகடனம் கிடைக்கப்பெற்றோம். அதனைத் தொடர்ந்து வரும் 2021 சனவரி மாதத்திற்கும் பெற்றிருக்கின்றோம்.
இப்பெருமை மிகு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் பெருமை கொள்கிறது. இதற்காக உழைத்த அனைத்து தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கும், மினசோட்டா மாநில ஆளுநர் மற்றும் அலுவலர்களுக்கும் நன்றி…பல்வேறு சாதனைகளைப் படைத்திட்ட நமது தமிழ்ச் சங்கத்திற்கு என்றும் ஆதரவளிக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி! இணையம் வழியாக நடைபெறப்போகும் சங்கமம் – 2021 (சனவரி 24 – கோரிக்கைக்கு ஏற்ப தியதி மாற்றப்பட்டுள்ளது) நிகழ்வில் நாம் அனைவரும் மறவாமல் பங்கு கொண்டு, கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழாவினை கொண்டாடி மகிழ்வோம்.