மினசோட்டாவில் ஒரு புதிய சாதனை!


Prasanna

உலகப் பொதுமறையாம் தமிழர்களின் ஒப்பற்ற இலக்கிய நூலாம் திருவள்ளுவர் தந்திட்ட திருக்குறளில், 133 அதிகாரத்தில் உள்ள 1330 குறளையும் அதன் பொருளையும் பிரசன்னா சச்சிதானந்தன் கூறி மாபெரும் சாதனை படைத்துள்ளார்! இச் சாதனையை செய்து முடிக்க அவர் எடுத்துக்கொண்ட கால அளவு 3 மணி 52 நிமிடங்களே ஆகும்… தமிழர்கள் அனைவரும் பெருமைப்பட இந்தச் சாதனையை இவ்வுலகிற்கு எடுத்துச் சொல்வதில் மினசோட்டா தமிழ்ச் சங்கமும் & தமிழ்ப் பள்ளியும் பெருமை கொள்கிறது !