2017 – உலகத் தாய்மொழி தினப் போட்டிகள் !!!

 

 

 

வணக்கம்
ஆண்டுதோறும், நமது மினசோட்டாத் தமிழ்ச்சங்கம், உலகத் தாய்மொழி தினத்தையொட்டி பெரியோர்க்கான கவிதை மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தி வருவது பலரும் அறிந்ததே.
இவ்வாண்டும் அதே போன்று கவிதை, கட்டுரை போட்டிகள் நடைபெறவுள்ளது.
கவிதை, மற்றும் கட்டுரை போட்டிகளுக்கான தலைப்புகளும், விதிமுறைகளும் கீழே தரப்பட்டுள்ளன.
கட்டுரைக்கான தலைப்புகள் (பின்வருபவனவற்றுள் ஏதேனும் ஒன்று) :
 
1 தமிழினம் மேலும் தழைத்தோங்க நாம் செய்ய வேண்டியவை 
2 தமிழர்களின் கடந்த நூறு ஆண்டு சாதனை
3 அமெரிக்காவில் நம் அன்னை மொழி
கவிதைக்கான தலைப்புகள் (பின்வருபவனவற்றுள் ஏதேனும் ஒன்று) :
1 வள்ளுவம் வகுத்த வாழ்க்கை நெறி
2 அழகுத் தமிழின் அறிவியல் நோக்கு
3 காதலும் வீரமும் நமதிரு கண்கள்
  • போட்டிக்கான படைப்புகள் இதுவரை அச்சிலோ, இணைய வழியிலோ வெளியிடப்படாமல், இப்போட்டிக்காக பிரத்யேகமாக படைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • கட்டுரைகள் குறைந்தபட்சம் இரண்டு முதல் நான்கு பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்.
  • கவிதைகள் 12 முதல் 24 வரிகள் கொண்டிருக்கலாம்.
  • தட்டச்சு செய்யப்பட்ட படைப்புகளாக இருத்தல் அவசியம்.
  • கவிதை, கட்டுரை போட்டிகளுக்கான முடிவுகள் தாய்மொழி தினக் கொண்டாட்ட நாளான 2/25/2017ல் அறிவிக்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்படும்.
  • 18 வயதுக்கு மேற்பட்டோர் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
தங்களது கற்பனைத் திறனையும், தமிழ்த் தாகத்தையும் உலகறிய எடுத்துக் கூற இதுவொரு சிறந்த வாய்ப்பு.
உங்களது படைப்புகளை, competition@minnesotatamilsangam.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய இறுதி நாள் 
பிப்ரவரி 15ம் நாள். 
போட்டிகள் பற்றிய மேலதிக விவரங்கள் வேண்டுவோர், கீழ்க்கண்ட முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்த்துகளுடன்
ரவிக்குமார்
மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளி