மினசோட்டாவில் வாழும் தமிழர்கள் ஒன்றுகூட வேண்டும், அவ்வேளையில் செந்தமிழும் கூடவேண்டும் என்ற முனைப்போடு களமாடிகொண்டு இருக்கும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின், சங்கமம் 2016 நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினர்களாக, தமிழகத்தில் இருந்து வந்து நம்மையெல்லாம் மகிழ்வித்த அசத்தல் மன்னர்களான ஈரோடு மகேஷ், கிறிஸ்டோபர், வெங்கடேஷ் மற்றும் மேலூர் சசி அவர்களுக்கும், கடுமையான அலுவலகப் பணி மற்றும் கொடுமையான மினசோட்டாவின் பனியின் மத்தியிலும் 2 மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து பயிற்சி பெற்று ஆடல், பாடல், நாடகம் என்று பல கலைகளைச் சிறப்பாக மேடை ஏற்றிய அத்துனைக் கலைஞர்ப் பெருமக்களுக்கும் எப்பொழுதும் போல் இப்பொழுதும் , தானாக முன்வந்து……,சங்கமம் விழாவை, தன் வீட்டு விழாவாகக் கருதி அனைத்து வேலைகளையும் செய்து முடித்த அன்புத் தன்ஆர்வலர்களுக்கும் சங்கமம் விழாவிற்குப் பொருளுதவி அளித்த அனைவருக்கும். தொடக்கம் முதல், இறுதி வரை அரங்கம் நிறைத்து அமர்ந்து இருந்து, அனைத்து நிகழ்சிகளையும் கண்டுகளித்து , உற்சாகப்படுத்திய மினசோட்டாவின் அங்கங்களே, தமிழ்ச் சொந்தங்களே …,உங்கள் அனைவருக்கும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ப் பள்ளியின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி நன்றி நன்றி……….
|