Proclamation of Tamil language and Heritage month in Minnesota
மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பு !!! நம் தமிழ் மொழியினையும் கலைகளையும் காத்திட, நம் கலாச்சாரத்தினை போற்றிட நம் தமிழர் திருநாளை மினசோட்டாவில் கொண்டாடிடும் இந்த வேளையில், சனவரி மாதம் முழுவதும் தமிழ் மொழி மற்றும் மரபுத் திங்களாக அறிவித்து மினசோட்டா மாநில ஆளுநர் “திரு.டிம் வால்ச்” பிரகடனம் செய்துள்ளார்.
இது நம் தமிழ் உறவுகள் அனைவரும் பெருமைப்படும் படியான செய்தியாகும். எங்கள் ஒவ்வொரு முயற்சிக்கும் ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி🙏🙏🙏